Blogs

26, Nov 2026

காயங்கள் தெரியாததால் வலி இல்லை என்று அர்த்தமல்ல (Not All Wounds Are Visible)

ஒவ்வொரு நாளும் மாயா அலுவலகத்திற்கு அனைவரையும் விட முன்பாக வந்துவிடுவாள். அவள் ஒருபோதும் குறை சொல்லியதில்லை. அரிதாகவே விடுப்பு எடுத்தாள். எந்தப் பணியையும் தாமதப்படுத்தியதில்லை.  

 

ஆனால், அவள் அர்ப்பணிப்பான உழைப்பிற்கு பின்னால் என்ன இருந்தது என்பதை யாரும் கவனிக்கவில்லை. 

 

ஆண்கள் அதிகமாக உள்ள பணிச்சூழலில், தனது திறமையை நிரூபிக்க மற்றவர்களை விட இருமடங்கு முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அவள் ஒரு கருத்தை சொன்னால் அது புறக்கணிக்கப்பட்டது. அதே கருத்தை ஒரு ஆண் சக ஊழியர் சொன்னால் அது பாராட்டப்பட்டது. 

 

அவள் தன்னம்பிக்கையுடன் பேசினால் "அதிக உணர்ச்சிவசப்படுகிறாள்" என்று கூறப்பட்டது. சில சமயங்களில் அவள் வாய்ப்புகளிலிருந்து விலக்கப்பட்டாள். சில கருத்துகளும் நடத்தைகளும் "சிரிப்புக்காகச் சொன்னதுதான்" என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. 

 

காலப்போக்கில், அவள் தனது கருத்துகளைப் பகிர்வதை குறைத்துக்கொண்டாள். தன்னம்பிக்கையையும் மெதுவாக இழக்கத் தொடங்கினாள். 

 

ஒருநாள், மாயா தனது வேலையை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தாள். 

இறுதி நாளில், வெளியேறும் பணியாளர்களிடம் கருத்து கேட்கப்படும் பின்னூட்டப் புத்தகத்தில் சில வரிகளை எழுதிவிட்டு அமைதியாக வெளியேறினாள். 

 

பின்னர் அந்தப் புத்தகத்தைத் திறந்தபோது, அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: 


"நான் அமைதியாக இருந்தது பேச விருப்பமில்லாததால் அல்ல. 

நான் பேசும் ஒவ்வொரு முறையும், என் கருத்துகளுக்கு போதிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்ற உணர்வு எனக்குள் உருவாக்கப்பட்டதால். 

நான் தனிமையில் இருந்தது தனிமையை விரும்பியதால் அல்ல. காலப்போக்கில், உரையாடல்களிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் நான் ஒதுக்கப்பட்டதால். 


நான் ஒரு பெண் என்பதற்காக திறமையில் குறைவானவள் அல்ல. இருப்பினும், மற்றவர்களை விட என்னை அதிகமாக நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை மீண்டும் மீண்டும் உருவானது. 

எனக்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் தேவையில்லை. மற்றவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை, சமமான வாய்ப்புகள் மற்றும் நானாக இருப்பதற்கான சுதந்திரம் மட்டுமே எனக்குத் தேவைப்பட்டது. 


என்னுடைய காயங்கள் வெளிப்புறமாக உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதனால் நான் காயப்படவில்லை என்று அர்த்தமல்ல. 

ஒவ்வொரு நாளும், என் தன்னம்பிக்கையின் ஒரு பகுதி குறைந்தது. என் குரல் மெல்ல மௌனமானது. நான் என்னையே சந்தேகிக்கத் தொடங்கினேன். 

அதில் மிகவும் வேதனை அளித்தது என்னவென்றால், 

இவை அனைத்தும் சாதாரணமான நடத்தையாகவே பார்க்கப்பட்டதுதான்." 

 

அவளுடைய வரிகள், பல ஆண்டுகள் யாரும் கேட்காத ஒரு குரலை வெளிப்படுத்தின. 

அப்போதுதான் அனைவருக்கும் ஒரு உண்மை புரிந்தது. 

 

வன்முறை என்பது எப்போதும் வெளிப்புறமாக தெரியும் காயங்கள் மட்டும் அல்ல. 

சில நேரங்களில் வன்முறை ஒருவரின் குரலை மௌனமாக்குகிறது. 
தன்னம்பிக்கையை சிதைக்கிறது. 
வாய்ப்புகளை பறிக்கிறது. 
தன்னைத் தானே சந்தேகிக்க வைக்கிறது. 

 

சிந்தித்துப் பார்ப்போமா? 

வன்முறையைப் பற்றி நினைக்கும் போது ஏன் நாம் வெளிப்புறமாக தெரியும் காயங்களை மட்டுமே தேடுகிறோம்? 

பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது உடல் ரீதியான தாக்குதல் மட்டுமல்ல. 

 

அது:

  • ஒரு பெண்ணின் குரலை அடக்குவதாக இருக்கலாம். 
  • அவளை தாழ்வாக உணரச் செய்வதாக இருக்கலாம். 
  • அவளின் தேர்வுகளையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம். 
  • அவளின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் சிதைப்பதாக இருக்கலாம். 
  • சமமான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கலாம். 
  • அவளை பாதுகாப்பற்றவளாக உணரச் செய்வதாக இருக்கலாம். 

 

சமத்துவம் என்பது சிறப்பு சலுகை அல்ல. அது சமமான மரியாதை, வாய்ப்பு மற்றும் சுதந்திரம். 

கண்களுக்கு தெரியாத வன்முறைகளையும் அடையாளம் காண்போம். 
மௌனமாக இருப்பதற்குப் பதிலாக குரல் கொடுப்போம். 
தீங்கு விளைவிக்கும் நடத்தைகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவோம். 

ஏனெனில் வெளிப்புறமாக தெரியாத காயங்களும் காயங்கள்தான். 

 



Not All Wounds Are Visible 


Every day, Maya arrived at the office before everyone else. She never complained, rarely took leave, and never missed a deadline.  

 

But no one noticed what was behind her dedicated work. 

 

In a male-dominated workplace, Maya constantly felt she had to work twice as hard to prove herself. When she shared an idea, it was often ignored. Yet when a male colleague shared the same idea, it was welcomed and appreciated. 

 

When she spoke confidently, she was labelled "too emotional." At times, she was excluded from opportunities. Certain comments and behaviours were dismissed as "just jokes." 

 

Over time, Maya began to share her opinions less often. Slowly, she started to lose confidence in herself. 

One day, Maya announced that she would be leaving the organisation. 

On her final day, she quietly wrote a few lines in the employee feedback book and left. 

 

Later, when someone opened the book, they found these words: 

"I was not quiet because I didn't want to speak. 

I became quiet because I often felt that my opinions were not valued. 

I was not alone because I preferred isolation. Over time, I found myself excluded from conversations and opportunities. 

I am not less capable because I am a woman. Yet I repeatedly felt that I had to prove myself more than others. 

I never wanted special treatment. I only wanted the same respect, opportunities, and freedom to be myself that others enjoyed. 

You may never have seen any wounds on my body. But that does not mean I was not hurt. 

Day by day, a little of my confidence faded. My voice became quieter. I began to doubt myself. 

What hurt the most was that all of this was seen as normal." 

 

Those few lines revealed a voice that had gone unheard for years. 

Only then did people realise an important truth. 

 

Violence is not always visible. 

Sometimes it silences a person's voice. 
Sometimes it destroys confidence. 
Sometimes it takes away opportunities. 
Sometimes it makes a person question their own worth. 

 

A Question Worth Reflecting On 


Why do we only look for physical scars when we think about violence? 

Gender-Based Violence (GBV) is not limited to physical harm. 

 

It can be: 

  • Silencing a woman's voice. 

  • Making her feel less capable because of her gender. 

  • Controlling her choices and freedom. 

  • Undermining her confidence and dignity. 

  • Denying her equal opportunities. 

  • Making her feel unsafe or powerless. 

 

Equality is not about special treatment. It is about equal respect, equal opportunities, and equal freedom. 

  • Let us learn to recognise forms of violence that cannot be seen. 

  • Let us speak up instead of remaining silent. 

  • Let us stop normalising behaviours that cause harm. 

 

Because just because you cannot see the wounds does not mean the pain is not real. 

 

Other Blogs